சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.1.16 லட்சம் அபராதம்

by Editor / 08-07-2022 08:38:16am
சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு  ரூ.1.16 லட்சம் அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 7 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்தம் மண்டலம் 15-ல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டலம் 1-ல் குறைந்தபட்சமாக 5 பேருக்கு ரூபாய் 2,500ம், மண்டலம் 5-ல் அதிகபட்சமாக 33 பேருக்கு ரூபாய் 16,500ம் விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

 

Tags : Rs 1.16 lakh fine for people not wearing face mask in Chennai

Share via