மணல் புயல் பேரிடர்

சீனாவின் வடபகுதி நகரங்களில் மணல் புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மங்கோலியாவில் இருந்து உருவான மிகப்பெரிய மணல் புயல் வடக்கு சீனாவின் நகரங்களை சூழ்ந்தது. இதனால் பல பகுதிகள் புழுதி மேகங்களால் நிரம்பி வழிகிறது. சாலைகளில் மணல் திட்டுகள் குவிந்து கிடக்கிறது. மணல் புயல் காரணமாக பல பகுதிகளில் பார்வைத் திறன் குறைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அடுத்த வாரத்தில் மேலும் மணல் புயல் வீசும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :