செவிலியர்கள் பணி பிரச்சனைகளுக்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்த முறை தான் காரணம்-மா சுப்பிரமணியன்
இன்று சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக பேட்டியளித்தார். தற்போது உள்ள செவிலியர்கள் பணி பிரச்சனைகளுக்கு முந்தை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்த முறை தான் காரணம் என்றும் சுகாதாரத் துறையில் தற்போது காலி படங்களை இல்லை என்றும் மீதமுள்ள 169 இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் நிரப்பப்படும் என்றும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3,783 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் காலி பணியிடங்கள் ஏற்படும் போது மூப்பின் அடிப்படையில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறினார். ஆனால், சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்வதாக குறிப்பிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் .அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,இதர சலுகைகள் வழங்க வேண்டும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :



















