கேரள மாநிலத்தில் பெண்களுக்கான திருவிழா

by Staff / 11-10-2022 02:11:15pm
கேரள மாநிலத்தில் பெண்களுக்கான திருவிழா

கேரள மாநிலத்தில் பெண்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியில் வரும் வகையிலும், நம்பிக்கை மற்றும் தைரியத்தை ஏற்படுத்துவதற்காக மூவாற்றுப்புழாவில் 4 நாட்கள் இரவு திருவிழா நடத்தப்பட்டது. மூவாற்றுப்புழா தொகுதி எம்.எல்.ஏ. மேத்யூ முயற்சியில் இத்திருவிழா நடந்தது. கடந்த 4 நாட்களும் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழா இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்த விழாவில் பெண்கள், மாணவிகள் ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி ஊர்வலம் நடத்தினார்கள். ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இந்த விழா பெண்களுக்கு மிகவும் தைரியம் அளிப்பதாக இருந்தது.
 

 

Tags :

Share via

More stories

Logo