பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்த த.வெ.க.மாவட்ட செயலாளர்பதவி பறிப்பு.

by Admin / 20-12-2025 08:17:08pm
பெண் நிர்வாகி  வீட்டில் அத்துமீறி நுழைந்த த.வெ.க.மாவட்ட செயலாளர்பதவி பறிப்பு.

 தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சி பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவமரியாதையாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். நாமக்கல்லை சேர்ந்த தமிழக வெற்றி கழகப் பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் செந்தில்நாதன் அத்துமீறி நுழைந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து காட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த்  நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். செந்தில்நாதன் , நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். கட்சியாக மாறிய பின்னா்  நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்..

 

 

Tags :

Share via