நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்

by Editor / 09-06-2021 05:20:02pm
நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்

 

 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி  சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பேசி வருகிறார் இந்த நிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளன எடப்பாடி பழனிசாமியை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் போஸ்டர் நெல்லை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.மானூர் ஒன்றிய .தி.மு. தொண்டர்கள்" என்ற பெயரில் ஓட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், "கட்சியின் செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட .பன்னீர்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எதையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப் போனோம். இனியும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo