ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு.

by Editor / 29-01-2024 10:12:09pm
 ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு.

பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பட்ஜெட்டில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

 

Tags : 6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு.

Share via
Logo