நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில்

by Staff / 31-12-2022 02:59:50pm
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில்

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு வருகின்றது. 

கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது.  இதன் உருவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில், அவை அனைத்தும் தற்போது நிறைவுடையும் நிலையை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள எஸ்பிளனேடு - சீல்டா இடையேயான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் நாட்டின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via