சுங்க கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிய ஓட்டுநர் ரயில்வே தடுப்பில் லாரி சிக்கியதால் ஓட்டுநர் தவிப்பு

by Editor / 15-06-2022 11:09:29am
சுங்க கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிய ஓட்டுநர் ரயில்வே தடுப்பில் லாரி சிக்கியதால் ஓட்டுநர் தவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சுங்க கட்டணத்திற்கு பயந்து லாரியை குறுக்கு வழியாக ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ரயில்வே தடுப்பில் சிக்கி தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பாந்தரா பள்ளி பகுதியில் ரயில்வே பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து உயர் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நற்றம்பள்ளி சென்ற தனியார் லாரி ஒன்று ரயில்வே தடுப்பில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது  இதனால் செய்வதறியாமல் திகைத்த ஓட்டுனர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தள்ள சொல்லி அங்கிருந்து எடுத்து சென்றார்.

 

Tags :

Share via

More stories