அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மாத்திரைகள் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொதுவை மருத்துவமனை ஸ்டான்லி மருத்துவமனை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் உயிர் காக்கும் சிகிச்சைக்குரிய மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில் அந்த மாத்திரைகள் அங்கு இல்லாததன் காரணமாக பொதுமக்கள் வெளியில் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி அந்த மாத்திரைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இன்புளுவன்சா காய்ச்சல் சிறுநீரக கற்களை அக பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்படி அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பில் இல்லை என்றும் இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்ற போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் காரணமாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் வழங்கப்படும் மாத்திரைகள் விரைந்து காலியாகி விடுகின்றன என்றும் அரசு மருத்துவமனைக்காக தனியாக ஒதுக்கப்படும் நீதியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் அதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மாத்திரைகள் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை

Tags :