தீபாவளி பட்டாசு வெடிப்பதில்  மோதல் ஒருவர் கொலை.

by Staff / 21-10-2025 08:44:26am
தீபாவளி பட்டாசு வெடிப்பதில்  மோதல் ஒருவர் கொலை.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தீபாவளிபண்டிகையை முன்னிட்டு  பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே தெருவில் எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்த இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ககைகலப்பாக மாறியதில்  வேலு என்பவர் இரும்பு ராடால் பார்த்திபன் என்ற கூலித் தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த  பார்த்திபன்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : தீபாவளி பட்டாசு வெடிப்பதில்  மோதல் ஒருவர் கொலை.

Share via