போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு தகவல் உண்மையில்லை
தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விாிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,. கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்க கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். என ஒருதகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யபப்டுவார்கள் என வெளியான தகவல் உண்மையில்லை என்றும், அப்படி ஒரு உத்தரவே போடவில்லை எனவும் உயர்கல்வித்துறை விளக்கம்அளித்துள்ளது.
Tags :



















