‘பழைய பேருந்துகளை பராமரிக்க வேண்டும்’ - அன்புமணி
சீர்காழியில் அரசுப் பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடிய விவகாரத்திற்கு இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பழைய பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் பழுது நீக்கியதாக கணக்கு காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு கவணித்தில் கொண்டு, விரைவில் பழைய பேருந்துகளை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
Tags :



















