புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்

by Staff / 14-12-2023 12:19:59pm
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற கைதி தப்பியோட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குள் கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்கு பிறகு, மாலையில் கணக்கெடுக்கும் போது ஜெயந்தியைக் காணவில்லை. ஜெயந்தி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்,
பெண் கைதி தப்பிய விவகாரத்தில், வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo