குப்பையில் கிடந்த 5 மாத சிசு.

by Staff / 10-10-2022 04:40:24pm
குப்பையில் கிடந்த 5 மாத சிசு.

சேலம் அன்னதானப்பட்டி புட்டாமிஷன் ரோட்டில் உள்ள பொதுத்துறை வங்கியின் அருகே ஒரு குப்பை தொட்டி உள்ளது. அதன் அருகே குப்பைகள் சிதறி கிடந்தது. அதில் இன்று காலை 5 மாத சிசு ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சிசுவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via