ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவாரா

by Staff / 03-09-2023 01:26:15pm
ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவாரா

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எங்கு போட்டியிடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கே.சி.வேணுகோபால் கூறினார். இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது இந்திய கமிஷன் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியுள்ளது. இது அந்த இயக்கத்தை வீழ்ச்சியின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது. கேரளாவுக்கு வெளியே சிபிஎம் கட்சியின் சிவப்புக் கொடி ரயில் நிலையத்தில் மட்டுமே உள்ளது என்று சாடினார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via