சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: தமிழக பாஜக வலியுறுத்தல்

by Staff / 22-05-2024 05:27:33pm
சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: தமிழக பாஜக வலியுறுத்தல்

பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய நதியா உள்ளிட்ட நபர்களின் கொடூர கு‌ற்ற‌ம் மன்னிக்க முடியாதது. அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். சிறுமிகளை அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via