கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் அடுத்தடுத்த நகரங்களில் ஐபிஎல் 2021 சீசன் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பாதுகாப்பு வளையமான பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்டது ஐபிஎல் நிர்வாகனத்தினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்தடுத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.
முன்னதாக தொற்று உறுதியான நான்கு வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரரான, ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிவந்த சாஹாவும் ஒருவர். பின்னர் அதில் இருந்து குணமடைந்தார்.
இந்த நிலையில், அவருக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் ஒன்றில் தொற்று இல்லை என்றும், மற்றொரு சோதனையில் பாதிப்பு உள்ளது என்றும் ரிப்போர்ட் வந்துள்ளது. தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் தொடர்ந்து சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், எனது குவாரண்டைன் நாட்கள் இன்னும் முடியவில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஒன்றில் பாசிட்டிவ், மற்றொன்றில் நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. மற்றபடி நான் நன்றாக உள்ளேன். எந்தவொரு தவறான தகவலையும் யாரும் எதுவும் தெரியாமல் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :