LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு அதிரடியாக விலை உயர்வு

by Editor / 17-07-2022 10:52:13pm
 LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு அதிரடியாக விலை  உயர்வு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. அதன்படி LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%-ல் இருந்து 18% ஆகவும் சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1000-க்கும் குறைவான விடுதி அறை வாடகைக்கு 12% ஆக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி வசூல் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

 

Tags : Drastic increase in prices of LED lights, pen ink, knife, blades

Share via