கட்சியைவிட்டு நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை

பாமக எம்எல்ஏ அருள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, அவரை பாமக தலைவர் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், ஒருவரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது என அருள் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 'ராமதாசுக்கு மட்டுமே நீக்கவும், நியமிக்கவும் அதிகாரம் உள்ளது. நான் பாமக இணை பொதுச்செயலாளராகவும், நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தொடர்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
Tags :