காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை..அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை

by Editor / 06-08-2025 01:03:09pm
காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை..அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை

கோயம்புத்தூர் பெரியகடை காவல் நிலையத்தில், இன்று ராஜன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், “ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். எதற்காக ராஜன் காவல் நிலையத்திற்குள் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்? என விசாரித்து வருகிறோம். பணியில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
 

 

Tags :

Share via