“ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை” - RBI அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் ரெப்போ ரேட் விகிதம் 5.5% ஆகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காலாண்டு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை” என ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
Tags :