அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் தமிழகம் நோக்கி வரத்தொடங்கிய தமிழர்கள்

by Editor / 23-03-2022 07:13:45pm
அதிகரிக்கும் விலைவாசி  உயர்வால் தமிழகம் நோக்கி வரத்தொடங்கிய  தமிழர்கள்

இலங்கையில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, இலங்கையில் அதிகரிக்கும் வறுமையின் கொடுமை காரணமாக தமிழகத்தை நோக்கி  அடைக்கலம் தேடி  இலங்கையிலிருந்து  தமிழர்கள்,குடும்பம், குடும்பமாக படகுகளில் ராமேஸ்வரம் நோக்கிவரத்தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடல் வழியே இலங்கைத்தமிழர் வருகையை கடலோரக்காவல்படையும்,காவல்துறையினரும் கண்காணிப்பு பணியைத் தீவீரப்படுத்தியுள்ளனர்.இந்த நிலையில்  ராமேஸ்வரம் கடல் பகுதியிலுள்ள மணல் திட்டுக்களில்  4 மாதகைக் குழந்தையுடன் தவித்த 16 பேர் மீட்கபட்டுள்ளனர்..மேலும் பல குடும்பங்கள் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் விலை வாசி விபரம்:

பெட்ரோல் 1 லிட்டர் ரூ.277, 

ஒரு கிலோ மிளகாய் ₹1,200

மிளகாய் வத்தல் கிலோ - ரூ.1200, 

தேங்காய் எண்ணெய் - ரூ.900

டீசல் - ரூ.214, 

சிலிண்டர் - ரூ.2,890, 

பிரட் - ரூ.130, 

சீனி - ரூ.215

பருப்பு - ரூ.360, 

உருளைக்கிழங்கு - ரூ.300,

 வெங்காயம் - ரூ.400, 

அரிசி - ரூ.185, 

சிமென்ட் - ரூ.1,830 வரையிலும் விற்பனை

 

Tags : Tamils ​​who started coming to Tamil Nadu due to rising prices

Share via