மதுரையில் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள்-முக்கிய பிரமுகர்கள் தி.மு.கவில் இணைந்தனர்.

by Admin / 07-03-2026 08:06:28pm
மதுரையில் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள்-முக்கிய பிரமுகர்கள் தி.மு.கவில் இணைந்தனர்.

இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள ராயப்பாளையத்தில் நடந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக  விழாவில் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக மற்றும் அமமுக கட்சியிலிருந்து விலகி சுமார் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஓ பன்னீர்செல்வம் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இணையும் பொதுக்கூட்டம் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக இது நடந்தேறியது.சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories