விருதுநகரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசி மூடைகள் பிடிபட்டன.

by Editor / 01-02-2022 05:03:41pm
விருதுநகரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசி மூடைகள் பிடிபட்டன.

 

 விருதுநகர் மாவட்ட பகுதியில் இருந்து ஒரு லாரியில் 20 டன் எடை கொண்ட 400 மூட்டை ரேஷன் அரிசி யை ஏற்றிக்கொண்டு அபு முகமது என்கின்ற ஓட்டுநர் இன்று அதிகாலை புளியரை காவல்துறை சோதனை சாவடி அருகே லாரியில் சென்ற பொழுது புளியரை காவல்துறை உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அந்த லாரியில் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள்   இருப்பது கண்டறியப்பட்டது இதன் தொடர்ச்சியாக லாரி ஓட்டுநரை போலீஸார் விசாரணை நடத்திய தொடர்ந்து விருதுநகர் பகுதியில் இருந்து லாரியை ஓட்டி வருவதாகவும் தனது ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இதனை கொண்டு கொல்லத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து லாரி மற்றும் 400 மூட்டை ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சரவணன் போஸ், மகேஸ்வரன் உள்ளிட்டோர் லாரி ஓட்டுனரை கைது  செய்து நெல்லைக்கு அழைத்து சென்றனர்.அரிசிமூட்டைகளை  தென்காசி குடிமைப்பொருள் உணவு தானியக் கிடங்கில் ஒப்படைத்தனர்.மேலும் லாரியை நெல்லைக்கு கொண்டு சென்றனர்

விருதுநகரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசி மூடைகள் பிடிபட்டன.
 

Tags : 400 bundles of ration rice bags were seized while trying to smuggle them to Kerala.

Share via