மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பங்காளி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி வாடகை கடைகள் உள்ளன.
நல்லாம்பட்டி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி . மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார். என்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் ஆகிய 3 பேரும் நண்பர்கள் என்றும் தினமும் இப்பகுதிக்கு வந்து மது அருந்துவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதை உச்சத்தை தொட்டதால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு சண்டையாக மாறி உள்ளது.
அப்பொழுது அருகில் கிடந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தலையில் தாக்கியதால் கார்த்தி என்பவருக்கு தலையில் வெட்டு விழுந்துள்ளது. அதேபோல் குமாருக்கு கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்துள்ளது.
ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்தபோது, மற்றொரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் கீழே படுத்து இருப்பதை பார்த்த இன்னொரு குடிமகன் நடித்துக் கொண்டு இருக்கிறாயா எனக் கூறியவாறு காலால் எட்டி உதைத்து கீழே இரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை தரதரவென இழுத்து ரோட்டில் போட்டு நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்.
இருவரும் ரத்த வெள்ளத்தில் கத்திய பொழுது கௌதம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் விரைந்து கௌதமை பிடித்துள்ளனர்.
அதே போல் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
திண்டுக்கல் வடக்கு நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :