தேர்தல் கருத்துகேட்பு கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டி..

by Staff / 10-02-2024 05:21:20pm
தேர்தல் கருத்துகேட்பு கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டி..

கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்கான கருத்துகேட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இதில்
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயகுமார், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஒ. எஸ். மணியன், உதயகுமார், வைகைசெல்வன், கே. சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, விவசாயிகள், தொழில்துறையினர், மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பல்வேறு தொழில் அமைப்புகள், விவசாயிகள் அமைப்பு, மீனவர்கள் அமைப்பு, கைத்தறி நெசவாளர்கள், மோட்டார் தொழிற்சங்கம் என பல்வேறு தரப்பினர் கொடுத்த கோரிக்கைகளை ஆய்வு செய்து பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்த்து ஆக்கப்பூர்வமான, வலிமை மிக்க தேர்தல் அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via