கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை எம் பி கனிமொழி

by Staff / 10-02-2024 05:18:22pm
கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை  எம் பி கனிமொழி

கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். குழுவின் தலைவர் எம் பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு‌ நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர்..

கூட்டத்தின் முடிவில் எம். பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். அதே சமயம் தொழில அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர். மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் சென்று கோரிக்கைகளை பெற இருக்கிறோம்.

 

Tags :

Share via