ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக மீண்டும் அதிகரிப்பு

கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 8000 கனஅடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 17,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது, இதனால் நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வந்தது.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே நேற்றும் இன்றும் கனமழை பெய்ததால் கூடுதலாக தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து நேற்று மாலை அதிகரித்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 23,ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது நீர்வரத்தானது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலோ அல்லது ஆங்காங்கே காவிரி கரையோர பகுதிகளில் பெய்யக்கூடிய மழையினாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Tags : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக மீண்டும் அதிகரிப்பு