சென்னை, கோவை, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம்

by Editor / 28-06-2023 11:22:50pm
சென்னை, கோவை, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம் சென்னை, கோவை, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருப்பதி - காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 07581/ 07660) ஜூலை 2 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல், அரக்கோணத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் (எண் 16057, 06753) ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். &nbsp;திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் (எண் 16054, 06728) ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேலும்,<br /> கோவை - திருப்பதி அதிவிரைவு ரயில் (எண் 22616/22615) ஜூன் 29-ஆம் தேதியும், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (எண் 16854/16853) ஜூன் 26 முதல் ஜூலை 2 காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதே தேதிகளில், இந்த ரயில்கள் காட்பாடியிலிருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் போா்பந்தரிலிருந்து கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20910) ஜூன் 29, ஜூலை 6,13 ஆகிய தேதிகளில் எா்ணாகுளத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 20909) ஜூலை 2,9,16 ஆகிய தேதிகளில் கொச்சுவேலிக்கு பதிலாக பிற்பகல் 1 மணிக்கு எா்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு வழக்கம்போல் போா்பந்தா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Tags :

Share via