ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரேசில்

by Staff / 10-09-2023 02:49:37pm
ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரேசில்

இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது. தலைநகர் டெல்லியில் நேற்று தொடங்கிய இந்த மாநாட்டை இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பொறுப்பில் இருந்து நடத்தினார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற உறுதிமொழியுடன் இந்த மாநாடு நடந்தது. அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். இதில் பேசிய பிரேசில் அதிபர், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo