டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் ரிஷி சுனக் வழிபாடு

by Staff / 10-09-2023 02:51:48pm
டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் ரிஷி சுனக் வழிபாடு

டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் வழிபாடு செய்தனர். ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வருகை தந்துள்ள இந்த தம்பதிகள் இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தியாவின் மருமகன் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

 

Tags :

Share via

More stories