சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

by Staff / 20-03-2024 01:02:15pm
சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அண்ணா நகரைச் சோ்ந்த சண்முகம் (56), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2021 செப். 16-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளாா். தகவல் அறிந்த சிறுமியின் தாய் திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.இதனையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில், நீதிபதி அளித்த தீா்ப்பில் சண்முகத்துக்கு இரு பிரிவுகளில் தலா 7 ஆண்டுகள் சிறையும், தலா ரூ. 1, 000 அபராதமும் விதித்தாா்.

 

Tags :

Share via

More stories

Logo