12ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியின் மகளிடம்,பாலியல் சீண்டல் தலைமை காவலர்கைது.

by Staff / 31-10-2025 12:06:57am
12ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியின் மகளிடம்,பாலியல் சீண்டல் தலைமை காவலர்கைது.

நாகப்பட்டினத்தில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரியின் மகளிடம், திட்டச்சேரி தலைமை காவலர் குணா என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 12ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியின் மகளிடம்,பாலியல் சீண்டல் தலைமை காவலர்கைது.

Share via

More stories