அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து

by Editor / 25-04-2025 01:41:13pm
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை விடுவித்த கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தபோது, ரூ.3 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, மறு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க ஆணையிட்டுள்ளது.

 

Tags :

Share via