4 முட்டை லாரிகளில் ரூ. 21. 45 லட்சம் பறிமுதல்

by Staff / 27-03-2024 04:12:20pm
4 முட்டை லாரிகளில் ரூ. 21. 45 லட்சம் பறிமுதல்

பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது கேரளாவுக்கு முட்டைலோடு ஏற்றி சென்று திரும்பி வந்து கொண்டிருந்த 4 லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டியை சேர்ந்த சின்ராசு(47) என்பவர் ஓட்டி வந்த லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்து 690, காரைக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்து 160, ராசிபுரத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ. 5 லட்சத்து 54 ஆயிரத்து 260, அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ. 7 லட்சத்து 40 ஆயிரத்தை கொண்டு வந்தது தெரிந்தது. மேலும் அவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்த மொத்தம் ரூ. 21 லட்சத்து 45 ஆயிரத்து 110-ஐ பரமத்தி வேலூர் தாசில்தார் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo