தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாட்கள் இலவச அனுமதி

by Admin / 23-02-2022 01:41:46pm
 தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க 3 நாட்கள் இலவச அனுமதி

ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
முகலாய  பேரரசரான ஷாஜகானின் 367 வது உர்ஸ் நினைவு தினம் தொடர்ந்து வருட வருடமாக அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கம். 

இதனையொட்டி வரும் 27,28,1 ஆகிய மூன்று தேதிகளுக்கு மட்டும் தாஜ்மஹாலை காண வரும் பொதுமக்களுக்கு இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கியுள்ளனர். 

இதுகுறித்த அறிவிப்பினை ஆக்ரா தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரை தளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோருடைய கல்லறைகளை காண மக்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். 

கொரோனா கட்டுபாடுகளுக்கு மத்தியிலும் தற்போது பொதுமக்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 
 

 

Tags :

Share via

More stories

Logo