2026 தேர்தலில் அதிமுகவுக்கு  எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதி விடுவார்-டிடிவி தினகரன்.

by Editor / 22-12-2024 12:54:10pm
2026 தேர்தலில் அதிமுகவுக்கு  எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதி விடுவார்-டிடிவி தினகரன்.

திருவண்ணாமலை அடுத்த ஆவூர் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்  திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்காக தீங்கு விளைவிக்கும் செயல்கள் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும், கடந்த காலங்களில் மீத்தேன், நீட் தேர்வு, காவிரியில் உரிய நதி நீர் பங்கீடு ஆகிய பிரச்சனைகளை உருவாக்கியது திமுக தான் என்றும், தற்போது ஆட்சியில் உள்ள திமுகவினர் மத்திய அரசு எனக்கூறி கபட நாடகம் ஆடுகின்றனர் என்றும், கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களுக்கு பத்து லட்சம் வழங்கும் திமுக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மக்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மெல்ல மெல்ல முழுகி கொண்டிருப்பது பழனிசாமியின் கப்பல் தான் என்றும், நான்கு பெயரை வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறார் என்று சொன்னவர்கள் தற்போது நான் கப்பல் வைத்திருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த கட்சி வளர்ந்துள்ளது என்றும், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவை எழுதி விடுவார் என்றும், ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே பொதுச் செயலாளர் பதவியை  எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றி வருகிறார் என்றும், தன்னுடைய சுயநலத்திற்காக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அழிக்க பார்க்கிறார் என்று தினகரன் பேட்டி அளித்தார்.மத்திய குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பாகவே ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது,என்றும், மீண்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி அளிக்கும் என்றும் கூறியவர், திமுக ஒரு தீய சக்தி என தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர், வருகின்ற 2026 தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையான வெற்றி பெறும் என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டணி என்ற பேச்சை முறியடித்து சிறுபான்மை ஓட்டுக்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் என்றும், திமுக ஆட்சியில் எவ்வளவு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் தென்பெண்ணை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து மாதங்களில் அடித்துச் செல்லப்பட்ட 16 கோடி ரூபாய் பாலம் ஒரு எடுத்துக்காட்டு
என்றும் மத்திய அரசு எதை செய்தாலும் தவறு என்று திமுக கூட்டணியர் கூறி வருகின்றனர் என்றும், திமுக ஆட்சியில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்று வருவதால் தான் மத்திய அரசு சிந்தித்து தமிழக அரசுக்கான நிதியை ஒதுக்கி வருகிறது.என்றும், ஆட்சியில் இருக்கும் போது வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதும் திமுகவின் நிலைப்பாடு என்றும் திமுக ஆட்சியை குறை கூறுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் என்றும்அம்பேத்கர் குறித்து அமித்ஷா  கூறிய கருத்துக்களை வேறு விதமாக திரித்துக் கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும்,தமிழகத்தில் முதலமைச்சர் குடும்பம் மற்றும் அமைச்சர்களை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளதாக டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

 

Tags : 2026 தேர்தலில் அதிமுகவுக்கு  எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதி விடுவார்-டிடிவி தினகரன்.

Share via