நவராத்திரி நாள் 7: அக்டோபர் 21 சனிக்கிழமை.
வழிபட வேண்டிய சக்தி தேவி: சரஸ்வதி தேவி, சாம்பவி *தேவி, காளராத்ரி,*
திதி: சப்தமி
நிறம்: ஆரஞ்சு
மலர்: தாழம்பூ, தும்பை
கோலம்: பூக்களால் சங்கு கோலம் போட வேண்டும்
ராகம்: பிலஹரி ராகம்
நைவேத்தியம்: காலை நேரத்தில் எலுமிச்சை சாதம் மற்றும் மாலை நேரத்தில் மொச்சைப் பயறு சுண்டல்
மந்திரம்: சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி தேவி பாடல்கள், சௌந்தரிய லஹரி
பலன்கள்: எதிரிகள் காணாமல் போவார்கள், வீணான பயம் நீங்கும், கலைகளில் ஞானம், தேர்ச்சி, கல்வியில் மேன்மை
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதி தேவிக்கான நாட்களாக கொண்டாடப்படுவதால், கலைமகளை வணங்கலாம்.
சாம்பவி தேவி, மகா சரஸ்வதி தேவி போலவே, வெண் பட்டாடை அணிந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் அருள்வார். கலைகள், கல்வியில் சிறந்து விளங்க, முன்னேற்றம் பெற, நவராத்திரி ஏழாம் நாளன்று சாம்பவி தேவியை வணங்கி வழிபடலாம்.
நவதுர்க்கையின் வடிவங்களில் ஒன்றான காளராத்திரி அம்மன், எதிரிகளுக்கும் அச்சம் தரக்கூடியவர். காளராத்திரி என்பது காலத்தின் முடிவு என்று பொருள். உங்களுக்கு நீண்ட காலம் தொந்தரவு செய்யும் எதிரிகள் மற்றும் மறைமுக தீய சக்திகள் அனைத்து காணாமல் போகும்.
பூஜை செய்யும் முறை:
பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று சரஸ்வதி தேவிக்கான நாள் என்பதால், சாம்பவியும் சரஸ்வதியின் மறு உருவமாக வணங்கப்படுவதால், சரஸ்வதி தேவிக்கான ஸ்லோகம், பாடல்களை ஒலிக்கலாம். பூஜை செய்யும் போது சௌந்தர்யா லஹரியை ஒலிக்கச் செய்வது சிறப்பு.
கொலு வைக்கப்பட்ட இடத்தில், பூக்களால் சங்கு வடிவத்தில் கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால், இன்று உங்களால் இயன்ற அளவுக்கு சிறுமிகளுக்கு படிப்பு சம்மந்தமான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வெற்றிலை பாக்கு, தாம்பூலத்தோடு மாதுளைப்பழம் வைத்துக் கொடுப்பது சிறப்பு.
எதிரிகள் தொல்லை நீங்க, வீடும் குடும்பமும் சுபிட்சம் பெற, ஒரு சிறுமியை வீட்டுக்கு அழைத்து, அவரை அம்பாளாக வணங்கி, வெண்பட்டாடை வழங்கி வணங்கலாம்.
#நவராத்திரி நாள் - 7: எதிரிகளின் தொல்லையை நீக்கும் ஏழாம் நாள் கொண்டாட்டம்... சப்தமி சாம்பவி வழிபாடு!
நன்மைகள் அருளும் நவராத்திரியின் ஏழாம் நாள் கலைமகளுக்கு உரியது என்பர். முதல் 3 நாள்கள் சக்திக்கும், அடுத்த 3 நாள்கள் திருமகளுக்கும், கடைசி 3 நாள்கள் சரஸ்வதிக்கும் உரியது என்பார்கள். வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக சாம்பவி அன்னையாக போற்றும் நாள் இன்று. சப்தமி என்பதாலும் ஏழாம் நாள் துர்கையாக காளராத்திரி தேவியையும் இந்த நாளில் வழிபடுவது உண்டு.
சாம்பு என்ற திருநாமத்தால் துதிக்கப்படுபவர் ஈசன். சாம்பு என்றால் அச்சம் தீர்ப்பது என்று பொருள். சாம்புவின் துணைவி சாம்பவி. சாம்பவி என்றால் அச்சம் தீர்ப்பவள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்கின்றன சாஸ்திரங்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் 122-ம் நாமமாக விளங்குவது சாம்பவி. விஷ்ணுசகஸ்ரநாமத்தில் 38-வது திருநாமமாக விளங்குவதும் சாம்பவி என்ற திருநாமமே.
அன்னை கலைமகள் சண்ட முண்டர்களை வதைக்க உதவி செய்யும் பொருட்டு பொன் பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளிய வடிவமே சாம்பவியின் திருக்கோலம். கைகளில் வீணை, அபய கரம் என்று சாந்த வடிவில் அன்னை காட்சி அருளினாலும், அதிலும் ஒரு வீரமான தோற்றம் இருப்பது தெரியும். இந்த நாளில் சாம்பவியை வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதோடு, வீண் அச்சங்கள், துர்சக்திகளின் மிரட்டல் போன்ற சங்கடங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
ஏழாம் நாள் போரில் அன்னை சாம்பவி சண்டமுண்டர்களை வதம் செய்து ஞான வடிவில் காட்சி அளித்து தேவர்களின் அச்சங்களை நீக்கினாள் என்று கூறப்படுகிறது. அதேபோல் நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி வழிபாடும் முக்கியமானது என்பர். காள என்றால் கரிய என்றும் ராத்திரி என்றால் மங்கலம் என்றும் பொருள். கரிய நிறத்துடன் மங்கலங்களை அள்ளித் தருவதாலேயே இவளுக்குக் காளராத்திரி எனப் பெயர் உண்டானது.
இந்தக் காளராத்திரியின் வடிவம் தீய சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. அடர் கரிய நிறமம் நான்கு கரங்களும் கொண்டவள். வஜ்ராயுதமும், வாளும் கொண்டு மற்ற இரு கரங்கள் வர, அபயம் தரும். இவள் பார்வை பட்டாலே துன்பங்களும், பாவங்களும் தொலையும். துர்சக்திகள் பயந்து ஓடும், எதிர்மறை ஆற்றல் அழியும் என்றும் நம்பப்படுகிறது. எனினும் இவளின் உருவம் உண்மையான பக்தர்களுக்கு அச்சம் தராமல் நன்மை தருவதால் இவரை ‘சுபங்கரி’ என்றும் போற்றுவர்
ஜகத்குரு ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில்...
"அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா!'
என்ற ஸ்லோகத்தில் அம்பிகையும் சரஸ்வதியும் வேறு வேறானவர்கள் இல்லை என்று பாடுகிறார். 'இடைவிடாது சிவநாமங்களை ஜபிப்பதால் சிவந்திருக்கும் உன் நாவில் அந்த கலைமகள் குடி இருக்கிறாள். உன் அம்சமாகவே விளங்கும் அந்த கலைமகளை வணங்குகிறேன்!' என்கிறார் ஆதிசங்கரர். இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் நினைவு ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.
கலைமகளின் அம்சமாய் இந்த நவராத்திரி ஏழாம் நாளில் அருளும் தேவியை மனம் குளிர வழிபட்டு வேண்டினால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி நலம் சேரும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி ஏழாம் நாள்:
திதி: சப்தமி
அம்பாள்: கலைமகள், சாம்பவி, காளராத்திரி தேவி
கன்னியா பூஜை: 8 வயது சிறுமிக்கு பிராக்மி மகா சரஸ்வதி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம்: எலுமிச்சம் பழ சாதம், பாயாசம், கற்கண்டு சாதம், புட்டு, பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல்.
கோலம்: திட்டாணிக் கோலம்.
புஷ்பங்கள்: தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை
இலை: விபூதி பச்சிலை, துளசி, வில்வம்.
பழங்கள்: பேரீச்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி
வஸ்திரம்: கருஞ்சிவப்பு, வெண்மை பட்டாடை
பாடலுக்கான ராகம்: பிலஹரி ராகம்.
ஆபரணம்: வெள்ளி, தங்கம் போன்றவைகளால் ஆன மாலைகள்.
தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு மாதுளை பழம்.
ஏழாம் நாளுக்கான பலன்கள்: ஞானமும் கல்வியும் கலைகளில் தேர்ச்சியும் கிடைக்கும்.
#மகாலட்சுமி அஷ்டகம்.
=======================
மகாலட்சுமி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
செல்வ மகளான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்குரியஅஷ்டகம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஒரு முறை துதிப்பவர்களுக்கு இதுவரை செய்த பாப வினைகள் அனைத்தும் நீங்குகிறது. தினமும் காலை, மாலை என இரு முறை துதிப்பவர்களுக்கு வீட்டில் செல்வச் சேர்க்கையும், தானியங்கள் பெருக்கம் ஏற்படும். வறுமை நிலை அணுகாது காக்கும். தினந்தோறும் மூன்று முறை துதித்து வழிபடுபவர்களின் இதயத்திலும், வீட்டிலும் மங்களங்கள் அருளும் தெய்வமான மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறி வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை அருள்வார்..ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ.
மகான்களுக்கும், ஞானிகளுக்கும் செல்வத்தின் தேவை இல்லை. ஆனால் இல்லற வாழ்வில் இருக்கின்ற மனிதர்களுக்கு செல்வம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே தான் சாமானிய மக்கள் செல்வமும், சுகபோகங்களையும் பெறுவதற்கு அருள்புரியும் தெய்வமான மகாலட்சுமி குறித்து பல மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் இயற்றிருக்கின்றனர். அப்படியான ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த அஷ்டக மந்திரம் தான் இந்த மகாலட்சுமி அஷ்டகம்.
இந்த அஷ்டகத்தை தினமும் உளமார துதிப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கும்.
Tags :