அமர்நாத் யாத்திரை சென்ற 15பேர் பலி-காணாமல் போன பக்தர்களை தேடும் பணி தீவீரம்

by Editor / 09-07-2022 09:45:35am
அமர்நாத் யாத்திரை சென்ற 15பேர் பலி-காணாமல் போன பக்தர்களை தேடும் பணி தீவீரம்

ஆண்டுத்தோறும்  இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் பனிக்குகை சிவன்  கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாத்திரையாக செல்வதுவழக்கமாக இருந்துவருகிறது.இங்கு செல்ல 43 நாட்களுக்கு மட்டுமே  செய்ய அனுமதிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30 தொடங்கி, வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரை செல்ல  3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.

 கடந்த 2 ஆண்டு காலமாக  கொரோனா தொற்று பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த வருடம் யாத்திரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.அமர் நாத் யாத்திரை செல்லும் வழிப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் குறுகிய நேரத்தில் மிக கனமழை கொட்டுவது வழக்கமாக இருந்துவருகிறது.இதனை மேக வெடிப்பு என்று கூறப்படுகிறது.

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் அமர்நாத்குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு  பெருமழை கொட்டியது.இதன்காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு உருவானது.இந்த மேக வெடிப்பு வெள்ளபெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 

அங்கு பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டு இருந்த  20க்கும் மேற்பட்ட முகாம்களையும் மேக வெடிப்பு காரணமாக உருவான  வெள்ளம் அடித்துச் சென்றது. இதில்  40க்கும் மேற்பட்ட பக்தர்கள் காணாமல் போயியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,அவர்களை  கண்டறியும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை சென்ற 15பேர் பலி-காணாமல் போன பக்தர்களை தேடும் பணி தீவீரம்
 

Tags : 15 killed in Amarnath Yatra - search for missing pilgrims intensified

Share via