47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது.

by Admin / 26-10-2025 05:18:27pm
47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது.

47வது ஆசியான் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு மலேசியா தலைமை வகித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் அரசியல் பொருளாதார வணிகம் சார்ந்த சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிய பகுதிகளில் ஒரு முன்னோக்கிய ஒருங்கிணைந்த மீள் திறனை கொண்ட ஆசியாவை உருவாக்குவது இம்மாநாட்டின் கருப்பொருளாக உள்ளது. .இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆசியான் கூட்டமைப்பு உச்சி மாநாடு நடைபெறும். இதில் பத்து நாடுகள் அதாவது மலேசியா ,சிங்கப்பூர், தாய்லாந்த், வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா, பர்மா ,பிலிப்பைன்ஸ், புரூனே உள்ளிட்ட நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன., இந்தப் பத்து நாடுகளில் ஒவ்வொரு நாடும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உச்சி மாநாட்டை நடத்தும்,. இந்த ஆண்டு மலேசியா, கோலாலம்பூரில் நடத்துகின்றது. .மற்ற நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவர்.. அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப அழைக்கப்பட்டுள்ளார். .இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அழைக்க பெற்றிருந்தார்.. ஆனால், அவர் நேரடியாக கோலாலம்பூர் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் காணொளி காட்சி வழியாக மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்.

 

47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது.
 

Tags :

Share via