தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பின் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே உறுப்பினர்களில் ஒருசிலர் உயிரிழந்ததாலும் பதவி விலகியதாலும் பதவிகள் காலியாகின. இந்த பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் வரும் 12ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Polling has started today in Tamil Nadu Local Government Elections