மருமகளை கொலை செய்த மாமியாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துவிட்டார். இவருடைய மனைவி நந்தினி இவர்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் வளையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மரிய ரொசாரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மாமியார் கிறிஸ்தோப்மேரி தன் தோழியோடு சேர்ந்து மருமகளை மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து ஒற்றுமையாக வாழலாம் என்று சொல்லி மகனிடம் மருமகளை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இருவரும் சென்ற நிலையில் தாயார் மட்டும் திரும்பி வந்த பொழுது மனைவியை எங்கே என்று மரிய ரோசரியோ கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்க வேண்டும் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கிரிஸ்டோப் மேரி தனது தோழியுடன் சேர்ந்து மருமகள் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக்கொள்ள... அதற்கான காரணத்தையும் காவல்துறையிடம் கூறினார் தனது மகன் நந்திரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தனக்கு பிடிக்கவில்லை என்றும் எனவே மாந்திரிகம் செய்வதாக கூறி மருமகளை அழைத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகளின் கழுத்தில் வெட்டி சாகடித்தேன் .இருப்பினும் கோபம் அடங்காமல் அவர் கழுத்தை துண்டாக வெட்டி ஆற்றங்கரையில் தனித்தனியாக உடலை புதைத்து விட்டதாகவும் தனக்கு உதவியாக தன்னுடைய தோழி இருந்தார் என்று கூறியதை, அடுத்து காவல்துறையில் அவரை கைது செய்தனர். கொலை செய்வதற்கு உடனடியாக இருந்த தோழியை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tags :



















