அரசு பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை 10 பேருக்கு தீவிர சிகிச்சை.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் 53 மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்த விடுதியில் நேற்றைய தினம் காலை உணவு சாப்பிட்ட 10, 11, 12 மற்றும் 6-ம்வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்த 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் 9 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நேற்றைய தினம் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்திய நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர்கள் காலை உணவாக இட்லி, சாம்பார், சட்னி சாப்பிட்டதாகவும் சாம்பாரில் நாய் முடி இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு தற்போது மேலும் ஒரு 10-ம் வகுப்பு மாணவி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 மாணவிகள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்கள் 10 பேரையும் மருத்துவர்கள் தனி கண்காணிப்பில் வைத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : 10 students who ate breakfast at a government school hostel are receiving intensive care for food allergies