16 வயது மாணவருக்கு ஆபாச படங்கள் அனுப்பிய ஆசிரியர்

ஒரு ஆசிரியர் தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது பள்ளி மாணவருக்கு அனுப்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றது. ரிக்கி லின் லாஃப்லின் (வயது 24) என்ற ஆசிரியை 16 வயது மாணவருடன் உடல் உறவில் ஈடுபட முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மாணவர் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்திய போலீசார், லாஃப்லின் மீது மொத்தம் 6 வழக்குகளை பதிவு செய்தனர்.
Tags :