எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம்

by Staff / 07-12-2022 01:38:49pm
எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கரும்பு விவசாயிகள் திருஆரூரான் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 400 கோடி ரூபாயை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தினசரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில்,   எட்டாவது நாளான  இன்று திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில்   ஈடுபட்டனர். சர்க்கரை ஆலைக்கு எதிராக 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கப்பட்ட போராட்டத்தில் சர்க்கரை ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தொடர்ந்து இன்று எட்டாவது நாளாக,   காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo