தந்தையின் பிறந்தநாள்... மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

by Staff / 20-08-2023 11:56:12am
தந்தையின் பிறந்தநாள்... மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via