அதிநவீன துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது- திமுக முக்கிய பிரமுகருக்கு வலைவீச்சு.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை வன எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியை சேர்ந்த ரஞ்சித் சிங் ராஜா மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் மற்றும் பொன்ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் திமுக பிரமுகரான முகேஷ் என்பவர் உட்பட சில நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அஜாக்கிரதையாக செயல்பட்ட உதவி வன அலுவலரை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட வன அதிகாரி அகில்தம்பி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கை முக்கிய வழக்காக எடுத்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முகேஷ் உட்பட அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை தற்போது வலைவீசி தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : அதிநவீன துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது- திமுக முக்கிய பிரமுகருக்கு வலைவீச்சு.