ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது.

by Editor / 23-01-2025 01:52:26pm
ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது.

 சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, வலிப்பு நோய் காரணமாக ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர்.

மருத்துவ பரிசோதனையில் ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும், அதனடிப்படையில் உடனடியாக ஞானசேகரனை டிஸ்சார்ஜ் செய்து எழும்பூர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது

Share via