பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு, பசவேஷ்வர் நகரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து பள்ளி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றினர். போலீசார் சோதனை செய்தும் எதுவும் கிடைக்காததால், தகவல் அளித்தவரை ஐபி முகவரி மூலம் தேடியதில் மாணவர் ஒருவர் பிடிபட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விடுமுறைக்காக இதைச் செய்ததாகக் கூறியுள்ளார்.
Tags :